தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. அது எங்களின் வாழ்க்கை நெறி. உலகில் கல்வியறிவும் மன்னராட்சியும் தோன்றும் முன்னரே தோன்றிய மூத்தகுடி பேசியது தமிழ் மொழி என பல்வேறு ஆராய்ச்சிகள் ஆவணங்கள் தமிழின் தொன்மையை வெளிக்கொணர்கின்ற.
கடந்தகால இராணுவ படையெடுப்புகளாலும், பண்பாட்டு படையெடுப்புகளாலும் காணக்கிடைக்காத அரிய நூல்களை இழந்திருக்கிறோம். கிடைத்த சில இலக்கியங்களிலும் கருத்துச்சிதைவு நடைபெற்றுள்ளதை முன்பின் முரணான கோட்பாடுகள் கொண்டுள்ளதை வைத்து அறிகிறோம்.
உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அங்கு தமிழர்களின் அடையாளத்தை காணமுடிகிறது. ஆனால் அனைவரும் ஒரு குடையின் கீழ் இன்னும் இணையவில்லை.
கண்ணோட்டம் (compassion), கல்வி, இயற்கை இவையனைத்துமே தமிழின் அங்கமாக விளங்குகின்றன என்பது இலக்கியங்களின் மூலமாக அறிய முடிகிறது. விருப்பு வெறுப்பு கொண்ட சாதாரண மனிதன் செய்ய வேண்டிய அறச்செயல்கள் பற்றியும், இயற்கைக்கும், உயிர்க்கும் தீங்கிழைக்காமல் வாழ்வது குறித்தும் தமிழ் அறம் வகுத்திருக்கிறது.
நம் முன்னோர்கள் காட்டிய கலங்கரை விளக்கின் துணை கொண்டு நாம் பயணிப்போம்.

ஈ,தா,கொடுஎன்றமூன்றுசொற்களுக்குக் கூடதொல்காப்பியம் இலக்கணம்
சொன்னது!
நம்மால் இயன்றதை கொடுப்போம் !
என்றும் மக்களுக்கு ஆதரவாய் நாம் இருப்போம்!

தமிழ் ஓர் மொழியாய்
மக்களாய் இப்புவியில் தோன்றி, நாகரீகங்கள் படைத்து, உலகெல்லாம் படர்ந்து, மொழியின் ஊடாக வீரம், கொடை, பண்பு வளர்த்து,

உலக வரைபடத்தில் உள்ள நாடுகளிலெல்லாம் சிதறிக் கிடக்கிறான் தமிழன்...
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே அதுதானே உண்மைநிலை

கற்க என்றார் வள்ளுவர், அதுவும் கசடு அற (பிழை இன்றி) என வழிமொழிந்தார்.
உலகிலேயே மக்களைப் படிக்கச் சொன்ன முதல் மனிதன் தமிழனே!

கொடிவழி தேடி...
சங்ககாலத் தமிழர்கள் தங்கள் நாகரிகமான அன்புடைவாழ்வை அன்பின் ஐந்திணை என்றனர்...
புதையுண்டு கிடக்கும் தமிழின் தொன்மங்களையும், மறைக்கப்பட்ட வரலாற்றையும் வெளிக்கொண்டுவர மறுக்கும் மறைமுக அரசியலை அடையாளம்காண அணிதிரள்வோம்.
தமிழர்கள் சர்வதேச வெளியில் அடையாளம் பெற அவர்களை ஊக்கப்படுத்தவும் கற்பிக்கவும் ஒன்றிணைவோம்.
நம் பண்பாட்டில் செழித்தோங்கும் வாழ்வாதார முறைகளை பிற சமூகங்களுக்கு கொண்டு சேர்க்க ஆயத்தமாவோம்.