உலக வரைபடத்தில் உள்ள நாடுகளிலெல்லாம் சிதறிக் கிடக்கிறான் தமிழன் பன்னிரெண்டு கோடித் தமிழனுக்கும் தமிழே முகவரி
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே அதுதானே உண்மைநிலை
நாம் ஏற்க வேண்டியதையும் நீக்க வேண்டியதையும் உணர்ந்து செயல்படுவோம் தமிழால் ஒன்றிணைவோம்
சாதியாய், மதமாய் ஆதியில் நாமில்லை பாதியில் வந்த பிளவை தமிழால் நேர்கொள்வோம்
வழிபடப் போன தமிழனும் தமிழும் கோயில் கருவறைக்கு வெளியே நிற்பது அவலம்…
நீதிமன்றத்தில் தமிழில்லை ஆட்சி அதிகாரத்தில் தமிழில்லை கல்வியில் அயல்மொழிக்கே மேன்மையும் மதிப்பும்
இந்த இழிநிலை துடைத்தெறிவோம்! தமிழால் ஒன்றிணைவோம்! தமிழராய் வாழ்வோம்!