கசடற கற்போம்
கற்க என்றார் வள்ளுவர், அதுவும் கசடு அற (பிழை இன்றி) என வழிமொழிந்தார்.
‘கடைநிலத்தோ ராயினும் கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைக்கப்படும்’ என்றது நாலடியார்.
‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்றான் பாண்டியன் அறிவுடை நம்பி! புறநானூறு இதைப் பறைசாற்றும்!
உலகிலேயே மக்களைப் படிக்கச் சொன்ன முதல் மனிதன் தமிழனே!
எப்படிப் படிப்பது, எதைப் படிப்பது, படிப்பதால் ஆயபயன் யாது? அதற்கும் வள்ளுவரே வழிசொன்னார்!
பெருமைசேர்க்க குடிமைகாக்க முப்பால் நம்மை கற்கச் சொன்னது!
மானுடம் மாண்புற, மாந்தநேயம் செழிப்புற, நல்ல நூல்களை கசடறக் கற்போம்! அதன்வழி நிற்போம்!